/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..
ADDED : ஆக 25, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
துணை ஆட்சியர் தாமரைச்செல்வன், சங்கராபுரம் ஊராட்சி சேர்மன் திலகவதி நாகராஜன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., மோகன்குமார் வரவேற்றார். முகாமில் 1450 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டது.
முகாமில் தாசில்தார் சசிகலா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், சங்கராபுரம் நகர செயலாளர் துரை, ஊராட்சி தலைவர் வாசுகி கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.