/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 30, 2024 12:13 AM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
கல்வராயன் மலையில் உள்ள வஞ்சிக்குழி, சேராப்பட்டு, கிளாக்காடு, இன்னாடு, வேங்கோடு 5 ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது.
கரியாலுார் சேராப்பட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பழங்குடியினர் நலத்துறை திட்ட இயக்குனர் சுந்தரம், ஒன்றிய சேர்மன் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., ஐயப்பன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
துணை சேர்மன் பாச்சாபீ ஜாஹீர் உசேன், தாசில்தார்கள் கோவிந்தராஜ், பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் சின்னத்தம்பி, கிருஷ்ணன் மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் 5 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கினர்.