/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..
ADDED : ஆக 30, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 30ம் தேதி 6 கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இன்று 30ம் தேதி வெள்ளிக்கிழமை திருநாவலுார் ஊராட்சி செங்குறிச்சி, திருக்கோவிலுார் ஊராட்சி திருப்பாலப்பந்தல், பூமாரி, உளுந்துார்பேட்டை ஊராட்சி எறையூர், ஏ.சாத்தனுார், கல்வராயன்மலை ஊராட்சி புதுப்பாலப்பட்டு கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.
இம்முகாமில் சம்மந்தப்பட்ட கிராம மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

