/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 05, 2024 12:26 AM
கள்ளக்குறிச்சி: ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. வரும் 6ம் தேதி ஊரக பகுதிகளில் முகாம் நடக்கிறது.
ரிஷிவந்தியம் ஒன்றியம் சீர்ப்பனந்தல், திருக்கோவிலுார் ஒன்றியம் விளந்தை, திருநாவலுார் ஒன்றியம் சேந்தமங்கலம், உளுந்துார்பேட்டை ஒன்றியம் திருப்பெயர், கள்ளக்குறிச்சி ஒன்றியம் சோமண்டார்குடி ஆகிய கிராமங்களில் நடக்கிறது.
முகாமில் சம்மந்தப்பட்ட கிராம பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.