/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நயினார்பாளையம் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
/
நயினார்பாளையம் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
நயினார்பாளையம் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
நயினார்பாளையம் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஆக 23, 2024 12:15 AM

சின்னசேலம்: நயினார்பாளையத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 400 மனுக்கள் பெறப்பட்டது.
சின்னசேலம் அடுத்த நயினார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார்.
அட்மா குழு தலைவர் கனகராஜ், ஊராட்சி தலைவர் மலர்கொடி, ஒன்றிய கவுன்சிலர் சித்ரா பெரியசாமி முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., செந்தில் முருகன் வரவேற்றார். சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் நயினார்பாளையம், மாமாந்துார், கருந்தலாக்குறிச்சி, அனுமனந்தல், வீ.அலம்பலம் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 400 பேர் மனுக்களை வழங்கினர்.
இதில் 19 அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மனுக்களை பெற்றுக்கொண்டனர். அதில் 7 பேருக்கு ரேஷன் ஸ்மார்ட் கார்டு உடனடியாக வழங்கப்பட்டது.
சின்னசேலம் தாசில்தார் மனோஜ்குமார், நயினார்பாளையம் ருத்ரகுமார், தனி தாசில்தார்கள் பாப்பாத்தி, கமலம், வி.ஏ.ஓ. ரஞ்சித்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
ஊராட்சி தலைவர்கள் வி.அலம்பலம் கண்ணன், கருந்தலாக்குறிச்சி அழகுவேல் வி.மாமந்துார் மாயாண்டி, அனுமனந்தல் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

