ADDED : மார் 02, 2025 04:40 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த அம்மையகரம் எலிசபெத் அன்னை இல்லத்தில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது.
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி முன்னிலை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் பிரகாஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், 41 குழந்தைகளுக்கு புதிய ஆடைகள், பேனா, பென்சில், நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினர். தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.மேலும் மேல்நாரியப்பனுார், நல்லாத்துார், நமச்சிவாயபுரம், கனியாமூர் ஆகிய கிராமங்களில் கொடியேற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய துணை செயலாளர்கள் சோலைமுத்து, கண்ரோஸ், தமிழ்செல்வி கோவிந்தன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், பெரியசாமி, அணி நிர்வாகிகள் கார்த்திகேயன், இந்திரா, சத்யா, ஏழுமலை, ஊராட்சி தலைவர் சிவஞானம், கிளை செயலாளர் மாயகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.