ADDED : மார் 02, 2025 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் சிவமுருகன், கண்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக
தொகுதி மேற்பார்வையாளர் பெருநர்கிள்ளி பேசினார். தி.மு.க., நிர்வாகிகள் ஊர்வலமாக கோஷமிட்டவாறு நடந்து சென்று, கட்சி கொடி ஏற்றினர். தொடர்ந்து, உறுதிமொழி ஏற்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், டிபன் பாக்ஸ் மற்றும் நலத்திட்ட உதவி பொருட்களும் வழங்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் கண்ணன், இதயதுல்லா, பாண்டுரங்கன், சிவக்குமார், நிஜாமுதீன், தவபாலன், செல்வம், ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இலக்கிய அணி அமைப்பாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.