/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: டி.ஆர்.ஓ., ஆய்வு
/
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: டி.ஆர்.ஓ., ஆய்வு
ADDED : செப் 11, 2024 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : வடபாலப்பட்டு தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை டி.ஆர்.ஓ., ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஒன்றியத்தை சேர்ந்த வடபாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் ஆய்வு செய்தார்.
உணவு சரியான முறையில் சமைக்கப்படுள்ளதா என்று சாப்பிட்டு பார்த்தார். பின் பள்ளி மாணவர்களிடம் தினசரி காலை உணவு சரியான நேரத்தில் தரமாக வழங்கப்படுகிறதா என்று மாணவர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி உடனிருந்தார்.