/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நாளை துவக்கம்: கலெக்டர் தகவல் 10ம் தேதி முதல் துவங்குகிறது: கலெக்டர் தகவல்

ADDED : செப் 09, 2024 06:08 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 10ம் தேதியில் இருந்து மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
பள்ளி, கல்லுாரி, மாணவ, மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நாளை 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால், போட்டியாளர்கள் வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகலை போட்டி நடைபெறும் தினத்தன்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வி சான்றிதழ் அல்லது பள்ளி அடையாள அட்டையும், பொதுப்பிரிவில் கலந்து கொள்பவர்கள் ஆதார் மற்றும் இருப்பிட சான்றிதழையும், அரசு ஊழியர்கள் பிரிவில் போட்டியிடுபவர்கள் பணியாளர் அடையாள அட்டையும், மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டையும் கட்டாயம் கொண்டுவர வேண்டும். மாவட்ட அளவிலான போட்டியில், தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
எனவே, விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து, போட்டியில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.