/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் 15 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறப்பு
/
மாவட்டத்தில் 15 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறப்பு
மாவட்டத்தில் 15 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறப்பு
மாவட்டத்தில் 15 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறப்பு
ADDED : பிப் 25, 2025 06:46 AM

ரிஷிவந்தியம்; வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் 15 இடங்களில் அமைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையொட்டி வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றினார்.
எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பேசுகையில், 'பொதுமக்களுக்கு தரமான மருந்து, மாத்திரை குறைந்த விலையில் வழங்க முதல்வர் மருந்தகம் துவக்கப்பட்டுள்ளது. அடக்க விலையில், மாத்திரைகளுக்கேற்ப 25 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. அரசு சார்பில் 7, தொழில் முனைவோர் சார்பில் 8 என மாவட்டத்தில் மொத்தம் 15 இடங்களில் மருந்தகம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் முருகேசன், பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் சுரேஷ், பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், அசோக்குமார், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, ஊராட்சி தலைவர் தீபா அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர்.

