ADDED : ஆக 29, 2024 08:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த அந்தியூர் புது காலனியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன்,30. இவரது மனைவி சூரியகலா, 25. இவர்களது இரண்டரை வயது மகன் கோபி. கடந்த 3 மாதங்களுக்கு முன் மஞ்சுநாதன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார்.
கடந்த 26ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த கோபி அருகே உள்ள தண்ணீர் குட்டையில் விழுந்து மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர் பரிசோதித்து குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின்படி, தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.