/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுவர் பூங்கா பணிகள் தீவிரம்
/
சிறுவர் பூங்கா பணிகள் தீவிரம்
ADDED : ஆக 15, 2024 05:51 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வையாபுரி நகரில் ரூ.51 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சி 19வது வார்டு, வையாபுரி நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்களின் பொழுது போக்கு அம்சத்திற்காக பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 51 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் பல்வேறு வசதிகளுடன் சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.