/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் தீயணைப்பு துறையினர் நீர்நிலை பாதுகாப்பு குறித்து பயிற்சி

ADDED : ஜூன் 11, 2024 11:27 PM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் தீயணைப்பு துறை சார்பில் நல்லாத்துார் ஏரியில் நீர்நிலைகளில் பாதுகாப்பாக இருப்பது குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
சின்னசேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு நல்லாத்தூர் ஏரியில் நீர்நிலைகளில் பாதுகாப்பாக இருப்பது, பெருமழை, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்பது குறித்து பொதுமக்களுக்கு போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.
சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர்கள் ராமச்சந்திரன், பழனிவேல் முன்னிலையில் தீயணைப்பு படை வீரர்கள் குழுவினர் இந்த செயல் பயிற்சியை செய்து காண்பித்தனர்.