/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் இலக்கிய பேரவை கண்ணதாசன் பிறந்த நாள் விழா
/
சின்னசேலம் இலக்கிய பேரவை கண்ணதாசன் பிறந்த நாள் விழா
சின்னசேலம் இலக்கிய பேரவை கண்ணதாசன் பிறந்த நாள் விழா
சின்னசேலம் இலக்கிய பேரவை கண்ணதாசன் பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 26, 2024 11:26 PM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை சார்பில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சின்னசேலம் சத்தியா மளிகை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார்.
ஆலோசகர் தங்கராசு, கம்பன் கழகத் தலைவர் பாலமுருகன், பேரவை செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நிறுவனர் கவிச்சிற்பி கவிதைத்தம்பி வரவேற்றார்.
கண்ணதாசன் உருப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் சங்க காப்பாளர் அசோகன், ஆலோசகர் நடராஜன், மாவட்ட கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை தலைவர் தங்கராசு, சின்னசேலம் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் கருணாநிதி, கம்பன் கழக துணைத் தலைவர் மணி, துணைத்தலைவர்கள் பிரகாஷ், ராஜா, துணைச் செயலாளர் ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் மாயக்கண்ணன், ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காப்பாளர் மணிவேல் நன்றி கூறினார்.