/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சித்தலுார் கோவில் தேர் திருவிழா
/
சித்தலுார் கோவில் தேர் திருவிழா
ADDED : மார் 07, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த சித்தலூர், பெரியநாயகி அம்மன் கோவிலில், மாசி திருவிழா கடந்த பிப்.26,ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், வீதிஉலாவும் நடந்தது. நேற்று முன்தினம் மயான கொள்ளை நடந்தது.
நேற்று தேரோட்டத்தையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, கருவறையில் உள்ள புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மனை திருத்தேரில் வைத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
எஸ்.பி., ரஜத் சதுர்வேதி தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.