/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சி.ஐ.டி.யூ., பட்டினி போராட்டம்
/
சி.ஐ.டி.யூ., பட்டினி போராட்டம்
ADDED : ஜூன் 25, 2024 07:27 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ., சார்பில் பட்டினி போராட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சி.ஐ.டி.யூ., துணைத்தலைவர் தெய்வீகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரகோத்தமன் துவக்க உரையாற்றினார். செயலாளர் நடராஜன் வரவேற்றார்.
துணைத் தலைவர் தங்க பாண்டியன், துணைச் செயலாளர்கள் நடராஜன், முருகன், நாகராசன், கந்தசாமி, சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 104 மாத அகவிலைப்படி உயர்வு, பணப்பலன்கள், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். காண்ட்ரக்ட் முறையினை கைவிட்டு, நிரந்தர பணிக்கு ஆட்களை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பொருளாளர் செல்வராஜன் நன்றி கூறினார்.