/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்க நிர்வாகிகளுக்குள் மோதல் இரு தரப்பினரும் போலீசில் புகார்
/
சங்க நிர்வாகிகளுக்குள் மோதல் இரு தரப்பினரும் போலீசில் புகார்
சங்க நிர்வாகிகளுக்குள் மோதல் இரு தரப்பினரும் போலீசில் புகார்
சங்க நிர்வாகிகளுக்குள் மோதல் இரு தரப்பினரும் போலீசில் புகார்
ADDED : மே 05, 2024 05:57 AM
திருக்கோவிலூர் : மணலூர்பேட்டையில் சங்க நிர்வாகிகளுக்குள் நடந்த மோதல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மணலூர்பேட்டை வர்த்தகர் சங்க தலைவராக (வெள்ளையன் பிரிவு) இருப்பவர் ரவிச்சந்திரன், 59; பேரூராட்சி துணைத் தலைவராக இருப்பவர் தம்பிதுரை. இவர் வணிகர் சங்கத்தின் விக்கிரம ராஜா பிரிவு தலைவராக உள்ளார்.
ரவிச்சந்திரன் சங்கத்திற்காக புதிய கட்டிடம் கட்டி வருகிறார் இந்நிலையில் இருவருக்கும் இடையே முன்பிரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 30ம் தேதி மாலை 6:15 மணிக்கு ரவிச்சந்திரன் கட்டுமானப் பணியை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தபோது, தம்பிதுரைக்கும், ரவிச்சந்திரனுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் தம்பிதுரையை கைது செய்யக்கோரி வர்த்தகர் சங்கத்தின் சார்பில் காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.