ADDED : ஆக 28, 2024 04:37 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 28ம் தேதி 5 கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. 15 துறைகளைச் சார்ந்த மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 28ம் தேதி 5 ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.
சங்கராபுரம் ஊராட்சி வடகீரனுார், சின்னசேலம் ஊராட்சி அம்மகளத்துார், திருநாவலுார் ஊராட்சி செங்குறிச்சி, உளுந்துார்பேட்டை ஊராட்சி கிளியூர், திருக்கோவிலுார் ஊராட்சி கூவனுார் கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.
இம்முகாமில் சம்மந்தப்பட்ட கிராமப் பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற வேண்டும் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.