/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எலியத்துார் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்
/
எலியத்துார் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்
எலியத்துார் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்
எலியத்துார் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:32 PM

கச்சிராயபாளையம் : எலியத்துார் கிராமத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது.
கச்சிராயபாளையம் அடுத்த எலியத்துார் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமை
தாங்கினார்.
ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், பி.டி.ஓ.,க்கள் செந்தில்முருகன், ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் மனோஜ் முனியன் வரவேற்றார்.
முகாமில் உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் எலியத்துார், கடத்துார், தெங்கியாநத்தம், பைத்தந்துறை, தொட்டியம், ஏர்வாய்பட்டினம் உள்ளிட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் 15 அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
மேலும் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும் அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிகழ்ச்சியில் 6 ஊராட்சிகளை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.