/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் பணிகள் குறித்து கலெக்டர் கள ஆய்வு
/
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் பணிகள் குறித்து கலெக்டர் கள ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் பணிகள் குறித்து கலெக்டர் கள ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் பணிகள் குறித்து கலெக்டர் கள ஆய்வு
ADDED : செப் 18, 2024 05:15 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் சிறப்பு திட்ட பணிகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் இன்று கள ஆய்வு செய்கிறார்.
கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், அரசு அலுவலகங்களின் வசதிகள், செயல்பாடுகள், திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாகவும், பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பா கலெக்டர் ஆய்வு மேற்கொள்கிறார்.
பிற பகுதிகளில் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்கின்றனர். ஆய்வு பணிகளை டி.ஆர்.ஓ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், சி.இ.ஓ., சுகாதாரத்துறை இணை இயக்குநர், வேளாண் துறை இணை இயக்குநர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், கால்நடைப் பராமரிப்பு துறை உதவி இயக்குநர்.
ஆவின் பொது மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் துறை சார்ந்த பணிகளை பார்வையிட்டு கலெக்டருக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளனர்.
இன்று மாலை 3:00 மணிக்கு கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டமும், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த ஆய்வு பணிகள் இன்று காலை 9.00 மணி முதல் நாளை காலை காலை 9.00 மணி வரை நடக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.