/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வாணாபுரத்தில் கலெக்டர் ஆய்வு
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வாணாபுரத்தில் கலெக்டர் ஆய்வு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வாணாபுரத்தில் கலெக்டர் ஆய்வு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வாணாபுரத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 11, 2024 04:27 AM

ரிஷிவந்தியம் : வாணாபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை, ஊரக பகுதிகளிலும் செயல்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்பேரில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வாணாபுரத்தில் இன்று (11ம் தேதி) நடக்கிறது. கலெக்டர் பிரசாந்த் தலைமையில், எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெறும் இம்முகாமில், அமைச்சர் வேலு பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார். அரியலுார், ஏந்தல், பெரியபகண்டை, வாணாபுரம், யால், அவிரியூர், பொற்பாலம்பட்டு, அத்தியூர் மற்றும் பாக்கம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, வாணாபுரத்தில் முகாம் நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் அமருவதற்கான இட வசதி, குடிநீர், அரசு துறைகளுக்கு அரங்குகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, வாணாபுரம் தாசில்தார் குமரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜலட்சுமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.