/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வர் மருந்தகங்கள் செயல்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
/
முதல்வர் மருந்தகங்கள் செயல்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
முதல்வர் மருந்தகங்கள் செயல்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
முதல்வர் மருந்தகங்கள் செயல்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 07, 2025 06:59 AM
கள்ளக்குறிச்சி : முதல்வர் மருந்தகங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில், கூட்டுறவு துறை சார்பில், 15 முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், முதல்வர் மருந்தகங்கள் அமைந்துள்ள இடங்கள், விற்பனை செய்யப்படும் மருந்துகள், பொதுமக்கள் மருந்தகங்கைள பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
முதல்வர் மருந்தகங்கள் குறித்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; பொதுமக்கள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பயனடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.