/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கனவு இல்லம் திட்டத்திற்கு செங்கல் தேவை விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
/
கனவு இல்லம் திட்டத்திற்கு செங்கல் தேவை விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
கனவு இல்லம் திட்டத்திற்கு செங்கல் தேவை விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
கனவு இல்லம் திட்டத்திற்கு செங்கல் தேவை விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 08, 2024 05:09 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாநிதியின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்படவுள்ள 3,500 வீடுகளுக்கு, 3 கோடியே 57 லட்சம் செங்கல் தேவைப்படுவதால், தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கருணாநிதியின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் மாவட்டத்தில் 3,500 பயனாளிகளுக்கு வீடு வழங்கப்படுகிறது. இதற்காக 9 ஒன்றியங்களிலும் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இதில், சின்னசேலம் ஒன்றியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 510 வீடுகளுக்கு, 52 லட்சத்து 2 ஆயிரம் செங்கல். கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு 430 வீடுகளுக்கு, 43 லட்சத்து 86 ஆயிரம் செங்கல். கல்வராயன்மலை ஒன்றியத்திற்கு 108 வீடுகளுக்கு, 11 லட்சத்து ஒரு ஆயிரத்து 600 செங்கல்.
ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்கு 620 வீடுகளுக்கு, 63 லட்சத்து 24 ஆயிரம் செங்கல். சங்கராபுரம் ஒன்றியத்திற்கு 290 வீடுகளுக்கு, 29 லட்சத்து 58 ஆயிரம் செங்கல். தியாகதுருகம் ஒன்றியத்திற்கு 490 வீடுகளுக்கு, 49 லட்சத்து 98 ஆயிரம் செங்கல்.
திருக்கோவிலுார் ஒன்றியத்திற்கு 410 வீடுகளுக்கு, 41 லட்சத்து 82 ஆயிரம் செங்கல். திருநாவலுார் ஒன்றியத்திற்கு 310 வீடுகளுக்கு, 31 லட்சத்து 62 ஆயிரம் செங்கல். உளுந்துார்பேட்டை ஒன்றியத்திற்கு 332 வீடுகளுக்கு, 33 லட்சத்து 86 ஆயிரத்து 400 செங்கல் தேவைப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 3,500 வீடுகளுக்கு மொத்தமாக 3 கோடியே 57 லட்சம் செங்கற்கள் தேவைப்படுகிறது.
எனவே, செங்கல் தயாரிக்கும் நிறுவனமும், புதிதாக செங்கல் தயாரித்து விநியோகம் செய்ய ஆர்வமுள்ள நிறுவனங்களும், தனிநபர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரங்களை கள்ளக்குறிச்சி உதவி இயக்குநர் (கனிமவளம்) 89031 44739 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.