/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய பஸ் நிலையத்திற்கு இடம் கலெக்டர் நேரில் ஆய்வு
/
புதிய பஸ் நிலையத்திற்கு இடம் கலெக்டர் நேரில் ஆய்வு
புதிய பஸ் நிலையத்திற்கு இடம் கலெக்டர் நேரில் ஆய்வு
புதிய பஸ் நிலையத்திற்கு இடம் கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : ஆக 02, 2024 02:29 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்திற்கான இடத்தினை தேர்வு செய்யகலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகே, பம்ப் ஹவுஸ் செல்லும் சாலையில், புதிய பஸ் நிலையம் அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து கடந்த 30ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து நேற்று கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார். புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் வகையில், இணைப்பு சாலைகள் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதற்கான திட்ட பணிகளை துவக்கவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது நகராட்சி பொறுப்பு ஆணையர் மகேஸ்வரி, நகர மன்ற தலைவர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.