sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லும் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை

/

10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லும் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை

10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லும் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை

10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லும் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை


ADDED : மே 16, 2024 11:42 PM

Google News

ADDED : மே 16, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி உரிய விளக்கம் அளித்தபோதும் அவ்வப்போது பொய்யான தகவல்கள் பரவியபடி உள்ளது. பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கப்படுகிறது.

கடந்த 2005ம் ஆண்டு முதன் முதலாக 10 ரூபாய் நாணயம் வெளியிட்ட நிலையில், இதுவரை 14 வகையான நாணயங்கள் வெளியிட்டு புழக்கத்தில் உள்ளது. அதேபோல் கடந்த 2020ம் ஆண்டு 20 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.

ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து வடிவங்கள் வாரியாக மாறுபட்டு உள்ளது. பத்து ரூபாய் நாணயத்தை வங்கிகள் நிறுத்த போகிறது மற்றும் போலி நாணயம் என பல வதந்திகள் மக்களிடையே காணப்பட்டது.

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு வகையில் விழிப்புணர்வு மேற்கொண்டது. தற்போது 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் பற்றிய சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற 14440 என்ற கட்டணமில்லா சேவையை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி நிலவரப்படி 10 ரூபாய் நாணயங்கள் 69 ஆயிரத்து 696 லட்சம் நாணயங்கள் உள்ளது. 20 நாணயங்கள் 15 ஆயிரத்து 963 லட்சம் நாணயங்கள் புழுக்கத்தில் உள்ளது. 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என கூறுவதோ, பணப்பரிமாற்றம் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுப்பது சட்டபடி குற்றமாகும். இதற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். அதேபோல் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் மற்றும் கடையின் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us