ADDED : செப் 03, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 229 பேர் பாதிக்கப்பட்டனர்; 68 பேர் இறந்தனர்.
இது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுலதாஸ் தலைமையில் ஒரு நபர் குழு ஆணையம் விசாரிக்கிறது. தற்போது, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராயபாளையம் போலீஸ் ஸ்டேஷன்கள், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் பணியில் இருந்த போலீசார், 80 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. முதல் கட்டமாக, நேற்று 10 பேரிடம் விசாரணை துவங்கியது.
அதில், கள்ளச்சாராயம் விற்பனை குறித்த தகவல்கள் தெரியுமா; தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது போன்ற கேள்விகளை ஆணையம் விசாரித்தது.