/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
/
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
ADDED : மே 24, 2024 05:58 AM
கள்ளக்குறிச்சி: சித்தலுாரில் மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கடந்த 21ம் தேதி நள்ளிரவு 12:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, சித்தலுார் பெரியாயி அம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் இருந்து வந்த மாட்டு வண்டியை போலீசார் நிறுத்தினர்.
போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த நபர் தப்பி விட்டார். போலீசார் சென்று பார்த்த போது அனுமதியின்றி மாட்டு வண்டியில் அரை யூனிட் மணல் திருடி சென்றது தெரிந்தது.
தொடர்ந்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய சித்தலுாரை சேர்ந்த திரிசங்கு மகன் செந்தில் என்பவர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.