/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பா.ஜ., நிர்வாகியை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
/
பா.ஜ., நிர்வாகியை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 18, 2024 06:14 AM

கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சியில் பா.ஜ.,பொறுப்பு குழு தலைவரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் ராகுல் எம்.பி.,யை அவதுாராக பேசிய பா.ஜ., பொறுப்பு குழு தலைவர் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ், வீரமுத்து, இளவரசன், துரைராஜ், இளையபெருமாள், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் குமரிமகாதேவன், முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், மாநில செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் காங்., ராகுலை தேசவிரோதி என விமர்சனம் செய்து பேசிய பா.ஜ., பொறுப்பு குழு தலைவர் ராஜாவின் உருவ படத்தை எரித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
இதில் மகிளா காங்., நிர்வாகி பவுனாம்பாள், வட்டார தலைவர்கள் கிருபானந்தம், அப்துல்கலாம், பெரியசாமி, ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.