/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர ஸ்கூட்டர்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர ஸ்கூட்டர்
ADDED : பிப் 28, 2025 05:20 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தலா 1.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை 5 மாற்றுத் திறனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.
சுயதொழில் புரிவோர், கல்வி பயில்வோர் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
எனவே அரசு, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் இதுபோன்ற திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் பேசினார்.