/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் பாலம் கட்டும் பணி 'ஜரூர்'
/
கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் பாலம் கட்டும் பணி 'ஜரூர்'
கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் பாலம் கட்டும் பணி 'ஜரூர்'
கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் பாலம் கட்டும் பணி 'ஜரூர்'
ADDED : செப் 09, 2024 06:17 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கோமுகி ஆற்றின் மேலே புதிய பாலம் அமைப்பதற்காக, பில்லர் அமைத்து பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை நான்கு வழிச்சாலை பணிகள் முழுவீச்சில் துவங்கி நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சியிலிருந்து- திருவண்ணாமலை சாலை முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 176 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த பிப்ரவரி 18ம் தேதி துவங்கியது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு பூமி பூஜை நடத்தி பணிகளை துவக்கினார். பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இப்பணிக்காக நகரப் பகுதியில் சங்கராபுரம் சாலையில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதுடன், சாலையில் பெரும் பகுதி பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் கோமுகி ஆற்றின் மேலே புதிய பாலம் அமைப்பதற்காக, பில்லர் அமைத்து பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
பணிகள் முடிந்து விரைவில் நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வரும் நிலையில் இச்சாலையில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் குறைந்து விபத்துகள் தடுக்கப்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.