/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கட்டட தொழிலாளர் சங்க அலுவலக கட்டடம் திறப்பு
/
கட்டட தொழிலாளர் சங்க அலுவலக கட்டடம் திறப்பு
ADDED : மார் 10, 2025 12:10 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கட்டட தொழிலாளர் சங்க அலுவலக கட்டடத்தினை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி, விளாந்தாங்கல் சாலையில், கட்டட தொழிலாளர் சங்க அலுவலக கட்டட திறப்பு விழா நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் முன்னிலை வகித்தார். நகர்மன்ற சேர்மன் சுப்ராயலு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் வேலு, அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து பேசினார்.
தொடர்ந்து கட்டட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலியமூர்த்தி, செந்தில் ஆகியோர் சொந்த நிதியில் அலுவலக கட்டடத்தை கட்டி கொடுத்த நகர்மன்ற சேர்மன் சுப்ராயலுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், காமராஜ், அண்ணாதுரை, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி, மாவட்ட பிரதிநிதி பெருமாள், ஒன்றிய சேர்மன்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன், வடிவுக்கரசி, ஒன்றிய செயலாளர்கள் அன்புமணிமாறன், நெடுஞ்செழியன், கனகராஜ், பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், நகர்மன்ற துணை தலைவர் ஷமீம்பானு, நகர துணை செயலாளர் அப்துல் ரசாக், வார்டு கவுன்சிலர்கள் செல்வா, விஜய் மனோஜ், அஸ்வின்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அமைச்சர் வேலு முன்னிலையில், 200க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்தனர். சங்க தலைவர் ரத்தினம் நன்றி கூறினார்.