தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 28, 2024 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2024 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருள் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ராஜி, சின்னையன், துணை தலைவர் அந்தோணிசாமி, பொருளாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் வளர்மதி, மாவட்ட துணை தலைவர் அப்பாவு, மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

இதில் வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி வழங்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். மனு செய்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். வீட்டு வசதி திட்டத்தை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us