/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 26, 2024 11:28 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
பொது செயலாளர் சக்திவேல், பிரசார செயலாளர் கந்தநாதன், துணை பொதுச் செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் செல்வராஜ் கண்டன உரையாற்றினார்.
இதில் தமிழகத்தில் தொடரும் சாராய சாவுகளை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டிப்பது, கடந்த 2016 தேர்தல் அறிக்கையில் கூறியவாறு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினர். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.