ADDED : பிப் 27, 2025 08:06 AM

கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கோட்ட அளவிலான பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் நடந்தது. தாசில்தார்கள் நளினி தலைமை வகிக்க, சேகர், அண்ணாமலை முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட நுகர்வோர் அமைப்பு சார்பில், கள்ளக்குறிச்சி துருகம் சாலை நகராட்சி குப்பை கொட்டும் இடத்தில் துர்நாற்றம் வீசுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் முன் வைக்கப்பட்டன.
இதுகுறித்து சம்மந்தப்பட் அதிகாரிகள் மூலம் விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இள மின்பொறியாளர் நாகராஜ், நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் அருண்கென்னடி, சுப்பிரமணியன், சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.