/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உயர்மட்ட பாலம் அமைக்க கோரி தொடர் முழக்கப் போராட்டம்
/
உயர்மட்ட பாலம் அமைக்க கோரி தொடர் முழக்கப் போராட்டம்
உயர்மட்ட பாலம் அமைக்க கோரி தொடர் முழக்கப் போராட்டம்
உயர்மட்ட பாலம் அமைக்க கோரி தொடர் முழக்கப் போராட்டம்
ADDED : பிப் 28, 2025 11:43 PM
திருக்கோவிலுார், ; திருக்கோவிலுார் பெண்ணையாற்றில் உயர்மட்ட பாலம் கட்டக்கோரி மா.கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்ற தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் - அரகண்டநல்லுாரை இணைக்கும் வகையில் தரைப்பாலம் உள்ளது. பழுதடைந்த இந்த பாலத்திற்கு மாற்றாக, உயர்மட்ட பாலம் அமைக்க, 15 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மா.கம்யூ., சார்பில் நேற்று மாலை மணம்பூண்டியில் தொடர் முழக்கப் போராட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் கணபதி தலைமை தாங்கினார். நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். காங்., சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் வாசிம்ராஜா, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, தனபால்ராஜ், இளங்கோவன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், பா.ம.க., மாவட்ட தலைவர் தங்க ஜோதி, ஐ.ஜே.கே., மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார், நாம் தமிழர் கட்சி சீனிவாசன், வி.சி., விடுதலைச் செல்வன், தே.மு.தி.க., மும்மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.