/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிநீர் தட்டுப்பாடு குறித்த புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்கள்

ADDED : மே 13, 2024 06:09 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு குறித்த புகார்களை கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் தற்போது கோடையில் நிலவு வரும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண மாவட்ட அளவில் குடிநீர் குறைதீர் கட்டுப்பாட்டு மையம் துவங்கப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்களில் ஏற்படும் குறைபாடுகளை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் 04151 - 222001, 04151-222002 என்ற 2 தொலைபேசி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும்.
கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் கோரிக்கைகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு குறைகளை களைந்து பொதுமக்களுக்கு தடைகளின்றி குடிநீர் விநியோகம் வழங்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பாக புகார்களுக்கு இக்குறைதீர் கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.