/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 26, 2024 11:26 PM
கள்ளக்குறிச்சி: கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் இணைப்பதிவாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-25ம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 12 மாத கால பயிற்சி.
இப்பயிற்சி பெற விருப்பமுள்ள நபர்கள் வரும் ஜூலை 19ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
இரண்டு பருவ முறைகளில், தமிழ் வழியில் பாடம் கற்பிக்கப்படும். பயிற்சி கட்டணமாக ரூ.18,750 செலுத்த வேண்டும். ஆன்லைனில் சமர்ப்பிக்க விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கையெழுத்திட்டு விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டை மூலமோ அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களை விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் 04146-259467, 94425 63330 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.