ADDED : மே 30, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி., மற்றும் விளையாட்டு துறை) கலந்தாய்வு நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.
கலந்தாய்வில் பங்கேற்க 174 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 20 பேர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, சிறப்பு பிரிவுக்கான சான்றுகள் சரிபார்க்கப்பட்டது. அதில் உரிய சான்றுகள் இல்லாத 10 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 10 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணையை கல்லுாரி முதல்வர் முனியன் வழங்கினார்.