/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுசேமிப்பு திட்டத்தில் ரூ.50 லட்சம் கபளீகரம் கள்ளக்குறிச்சியில் தம்பதி கைது

ADDED : ஏப் 28, 2024 02:32 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, ராமச்சந்திரா நகரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி பத்மாவதி, 54; இவர், கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் இயங்கிய தனியார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில், சிறுசேமிப்பு திட்டத்தில், 2019ம் ஆண்டு சேர்ந்து மாதம் 1,500 ரூபாய் செலுத்தி வந்தார்.
நிறுவன உரிமையாளர்கள் பன்னீர்செல்வம், 56, மற்றும் அவரது மனைவி சுஜாதா, 46, ஆகிய இருவரும் 3 மாதத்திற்கு ஒரு முறை பம்பர் குலுக்கல் நடைபெறும் எனவும், அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தங்க காசு வழங்கப்படும் எனவும் கூறினர்.
அதை நம்பி பத்மா வதி, செந்தாமரை, ஜெயின்பீ மற்றும் சிலர் தங்களுக்கு தெரிந்த நபர்களை, இத்திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்த்தனர். இவர்கள் மாதம் 1,500 வீதம் 50.84 லட்சம் ரூபாயை செலுத்தினர்.
ஆனால், பன்னீர்செல்வம் மற்றும் சுஜாதா முறையாக குலுக்கல் நடத்தாமலும், கட்டிய பணத்தைத் தராமலும் ஏமாற்றியதோடு, பணத்தை கேட்டவர்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த பத்மாவதி அளித்த புகாரின் படி, பன்னீர்செல்வம், சுஜாதா ஆகிய இருவரையும் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.