/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் இன்று கோர்ட் புறக்கணிப்பு
/
கள்ளக்குறிச்சியில் இன்று கோர்ட் புறக்கணிப்பு
ADDED : ஏப் 12, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கோர்ட் ஊழியர்கள் நியமிக்கப்படாததால் பணிகள் தொய்வடைந்து வருவதை வலியறுத்தி, வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று ஒருநாள் கோர்ட் பணிகளை புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட நீதிமன்றம் பிரிக்கப்பட்ட பின்பும், போதியளவு ஊழியர்கள் நியமிக்கப்படாமல் நீதிமன்ற பணிகள் தொய்வடைந்து வருகிறது. இதனை வலியுறுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்வதாக தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று முழுவதும் கோர்ட் பணிகளில் ஈடுபடாமல் இருக்க போவதாக வழக்கறிஞர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

