/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலத்தில் கோர்ட் நீதிபதி இடம் தேர்வு
/
சின்னசேலத்தில் கோர்ட் நீதிபதி இடம் தேர்வு
ADDED : மார் 03, 2025 07:28 AM

சின்னசேலம் : சின்னசேலத்தில் கோர்ட் அமைப்பதற்கான இடத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதி தேர்வு செய்தார்.
சின்னசேலம் மக்கள் கோர்ட் பணிகளுக்கு கள்ளக்குறிச்சி, உளுந்துார் பேட்டை, விழுப்புரம் என அலைக்கழிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கள்ளக் குறிச்சி மாவட்ட பொறுப்பு நீதிபதியும், சென்னை ஐகோர்ட் நீதிபதியுமான புகழேந்தி, சின்னசேலத் தில் கோர்ட் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஊராட்சி ஒன்றியம் அருகே தாலுகா அலுவலகம் முன்பகுதி யில் உள்ள இடத்தை தேர்வு செய்தார்.
இந்த ஆய்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி, தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீராம், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சையத் பர்கதுல்லா, டி.ஆர்.ஓ., ஜீவா, தாசில்தார் மனோஜ்முனியன், ஆர்.ஐ., வெங்கடேசன் மற்றும் வக்கீல்கள் உடன் இருந்தனர்.