/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஈய்யனூரில் விவசாயிகளுக்கு சாகுபடி குறித்த பயிற்சி முகாம்
/
ஈய்யனூரில் விவசாயிகளுக்கு சாகுபடி குறித்த பயிற்சி முகாம்
ஈய்யனூரில் விவசாயிகளுக்கு சாகுபடி குறித்த பயிற்சி முகாம்
ஈய்யனூரில் விவசாயிகளுக்கு சாகுபடி குறித்த பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 28, 2024 11:13 PM
தியாகதுருகம்: ஈய்யனூர் கிராமத்தில் காரீப் முன் பருவ பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள ஈய்யனூர் கிராமத்தில் வேளாண் துறை மூலம் நடந்த காரீப் முன் பருவ பயிற்சி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தலைமை தாங்கினார்.
வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) வனிதா முன்னிலை வகித்தார்.
காரீப் முன் பருவத்தில் சாகுபடி செய்ய வேண்டிய பயிர்கள் குறித்தும் அதற்காக அரசு வழங்கும் சலுகைகள் பற்றி விவசாயிகளுக்கு விவரிக்கப்பட்டது. அதிக பலன் தரும் தென்னங்கன்றுகள் வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கி பயனடைய அறிவுறுத்தப்பட்டது.
பசுந்தாள் உரம் பயிரிடுவதால் ஏற்படும் பலன்கள், தோட்டக்கலைச் சார்ந்த திட்டங்கள், அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
ஒவ்வொரு பயிரிலும் மகசூலை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
துணை வேளாண் அலுவலர் சிவனேசன், உதவி விதை அலுவலர் ஞானவேல் வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் செல்வி, ரவி, கலைவாணன் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.