/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராய வழக்கில் இருவரின் காவல் நீட்டிப்பு
/
கள்ளச்சாராய வழக்கில் இருவரின் காவல் நீட்டிப்பு
ADDED : ஆக 08, 2024 10:55 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து சாராய வியாபாரிகள், மெத்தனால் சப்ளையர்கள் என 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களில் பரமசிவம், முருகேசன் ஆகியோரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.
இதனையடுத்து இருவரையும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.
அவர்களை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், இருவரின் நீதிமன்ற காவலை வரும் 23ம் தேதி வரை ட்டித்து உத்தரவிட்டார்.