/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீ விபத்தில் மரங்கள் எரிந்து சேதம்
/
தீ விபத்தில் மரங்கள் எரிந்து சேதம்
ADDED : மே 03, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்,- சங்கராபுரம் அருகே தீ விபத்தில் மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் பச்சையம்மன் கோவில் அருகே சாலையோரம் தேக்கு, மாமரங்கள் உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன. நேற்று இப்பகுதியில் உள்ள மரங்கள் திடீரென தீ பிடித்து எரியத் துவங்கியது.
சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 5,000 ரூபாய் மதிப்பிலான மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.