ADDED : ஆக 21, 2024 08:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.
வரஞ்சரம் அடுத்த புக்கிரவாரியைச் சேர்ந்தவர் தர்மராஜா மகள் மோனிகா, 15; பெருமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இவரை கடந்த 16ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் குன்னம்மாள் அளித்த புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.