தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கோரிக்கை  ஆர்ப்பாட்டம்

கோரிக்கை  ஆர்ப்பாட்டம்

கோரிக்கை  ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 11, 2024 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 12:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி,: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், ேஷக்ஜாகீர் உசேன், அருணா சூரியகுமார், செல்வராசு, மனோகரன், எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் லட்சுமிபதி கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.

இதில் பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்ககூடியதாக உள்ள அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்.

முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில நிர்வாகிகள் ரஹீம், ராமதாஸ், மாவட்ட தலைவர்கள் அண்ணாமலை, லாரன்ஸ், அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us