/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நில உரிமையாளர்கள், முகவர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை மனு
/
நில உரிமையாளர்கள், முகவர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை மனு
நில உரிமையாளர்கள், முகவர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை மனு
நில உரிமையாளர்கள், முகவர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை மனு
ADDED : ஆக 26, 2024 05:13 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நில உரிமையாளர்கள், தரகர்கள், முகவர்கள் நல சங்கம் சார்பில் அமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை தலைவர் மற்றும் பதிவுத்துறை, வணிக வரித்துறை அமைச்சருக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலு அனுப்பியுள்ள மனு:
தமிழகத்தில் 5 சென்ட் மற்றும் 10 சென்ட் இடங்களை விற்பனை பதிவுக்கு சார்பதிவாளர்கள் அனுமதி மறுக்கிறார்கள். ஆனால், இதற்கான சுற்றறிக்கை எதுவும் வழங்கப்படவில்லை.
எனவே, ஏற்கனவே கிரயம் செய்து கொடுத்துள்ள மற்றும் பூர்வீக சொத்தாக உள்ள 5, 10 சென்ட் இடத்தை கிரயம் செய்து கொடுக்க அனுமதி வழங்க வேண்டும்.
இல்லையெனில், வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே ஏக்கர் கணக்கில் உள்ள இடத்தில் 5 சென்ட், 10 சென்ட் தனியாக பிரித்து கிரயம் செய்ய தேவையில்லை. மாறாக ஏற்கனவே கிரயம் செய்து வைத்துள்ள 5 சென்ட், 10 சென்ட் இடத்தை தனி பத்திரமாககோ, தனிப்பட்டாவோ இருந்தால் பதிவுத்துறை அலுவலகத்தில் கிரயம் செய்து கொடுக்க அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

