நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: மின் கட்டண உயர்வை கண்டித்து மா.கம்யூ., சார்பில் உளுந்துார்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின் கட்டண உயர்வை கண்டித்து உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு மா. கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், மோகன், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு கண்ணன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு சாமிநாதன், அலமேலு, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

