/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இந்து மகா சபா கண்டன ஆர்ப்பாட்டம்
/
இந்து மகா சபா கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 04:43 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க கோரி இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
உளுந்துார்பேட்டையில் பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் இடங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் போக்கை கண்டித்தும், கோவில் இடங்களை மீட்க கோரியும் இந்து மகா சபா சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார்.
மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார்.
மாவட்ட தலைவர் சபரிராஜன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் பாரதிராஜா, விழுப்புரம் மாவட்ட தலைவர் முத்து, மாவட்ட துணை தலைவர் ஐயப்பன், கடலுார் மாவட்ட துணை தலைவர் பாஸ்கர், உளுந்துார்பேட்டை நகரத் தலைவர் அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

