/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 12, 2024 06:04 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தனராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜகோபால் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் பெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர் மாயவன், நிர்வாகிகள் ஏழுமலை, ஜெகதீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய அபராத தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும்.
சோப்பு, பெருங்காயம், டீத்துாள், சேமியா, மஞ்சத்துாள், உப்பு, தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.